கோலாலம்பூர், அக்டோபர்.23-
புக்கிட் அமான் நிர்வாகத் துறை இயக்குநர் டத்தோ ஶ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் மஜிட்டுக்கு, நேற்று புதன்கிழமை, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், Panglima Gagah Pasukan Polis விருதை வழங்கி கௌரவித்தார்.
நேற்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான பிடிஆர்எம் வீர விருதுகள் வழங்கும் விழாவில், விருதுகள் பெற்ற 109 அதிகாரிகளில் அப்துல் அஸிஸ் முன்னிலை வகித்தார்.
புக்கிட் அமான் Logistics மற்றும் Technology துறையின் இயக்குநர் Gilberd Philip Layang, ஜோகூர் காவல்துறைத் தலைவர் Datuk Ab Rahaman Arsad மற்றும் பினாங்கு காவல்துறைத் தலைவர் Datuk Azizee Ismail ஆகியோரும் Panglima Gagah Pasukan Polis விருதைப் பெற்றனர்.
இவ்விழாவில், மொத்தம் 5 அதிகாரிகளுக்கு Panglima Gagah Pasukan Polis விருதும், 16 அதிகாரிகளுக்கு Pahlawan Pasukan Polis விருதும், 6 அதிகாரிகளுக்கு Kesatria Pasukan Polis விருதும், 78 அதிகாரிகளுக்கு Bentara Pasukan Polis பதக்கமும் வழங்கப்பட்டன.








