பாச்சோக், அக்டோபர்.02-
தனது உறவுக்கார நபரால் சுத்தியால் தாக்கப்பட்டு, தலையில் பலத்த காயத்துடன் கடந்த 6 நாட்களாக உயிருக்குப் போராடி வந்த 7 வயது சிறுவன், இன்று பிற்பகல் 3 மணியளவில் சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்தான்.
முகமட் அம்மார் முகமட் பட்ருல் என்ற அந்தச் சிறுவன் உயிரிழந்ததை அவனது தந்தை முகமட் பட்ருல் ரம்லி உறுதிபடுத்தினார்.
கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி அந்தச் சிறுவனின் தலையில் சுத்தியால் அடித்த ஆடவர் பின்னர் தூக்கில் தொங்கி தனது உயிரை மாய்ந்துக் கொண்டார். தலையில் கடும் காயங்களுடன் குபாங் கெரியான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தச் சிறுவன், மிகக் கவலைக்கிடமாக இருந்த நிலையில் இன்று அவனது உயிர் பிரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.








