Aug 6, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சரவை மாற்றம் சிந்தித்து வருகிறேன் பிரதமர் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

அமைச்சரவை மாற்றம் சிந்தித்து வருகிறேன் பிரதமர் கூறுகிறார்

Share:

தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்து சிந்தித்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். அதேவேளையில் அமைச்சரவை மாற்றத்திற்கான சாத்தியம் இருப்பதையும் அவர் பிரதமர் கோடி காட்டினார்.

தமது பத்து மாத கால ஆட்சியில் அமைச்சரவையில் மிகப்பெரிய சீரமைப்பை செய்வதற்கு பிரதமர் அன்வார் திட்டமிட்டு வருவதாக ஊடகங்கள் ஆருடம் கூறி வருகின்றன.

குறிப்பாக, வரும் அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பகாங், பெலாங்கை சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு மிகப்பெரியளவில் அமைச்சரவை மாற்றம் நடைபெறலாம் என்று அவை சுட்டிக்காட்டியுள்ளன.

இந்நிலையில் இன்று கோலாலம்பூரில் மலேசிய அனைத்துலக வர்த்தக கண்காட்சி மையமான MITEC கில் 2023 ஆம் ஆண்டுக்கான தகவல், தொழில்நுட்ப, தொடர்புத்துறைக்கான உச்சநிலை மாநாட்டை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைத்தப் பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

Related News