Aug 6, 2026
Thisaigal NewsYouTube
24 மணி நேர இடைவிடாத திரையீடு மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது ஜெயீலர்
தற்போதைய செய்திகள்

24 மணி நேர இடைவிடாத திரையீடு மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது ஜெயீலர்

Share:

கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் மலேசிய முழுவதிலும் திரையீடு கண்டுவரும் ரஜினி நடித்த ஜெயீலர் திரைப்பட வெளியீட்டை ஒட்டி, 24 மணி நேரம் இடைவிடாது ஜெயீலர் திரைப்படத்தை திரையீட்டு Five Star Trading மற்றும் LFS Cinema மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்று வரலாறு படைத்துள்ளன.

கடந்த ஆகஸ்ட் 19, 20 ஆகிய தேதிகளில் Five Star Trading மற்றும் LFS Cinema, பி.ஜே ஸ்தேட் திரையரங்கில் 26 மணி நேரம் 59 நிமிடங்களில் ஜெயீலர் திரைப்படத்தை மிக நீண்ட நேரம் இடைவிடாமல் திரையிடப்பட்டதின் மூலம் மலேசிய சாதனைப் புத்தகத்தில் முத்திரைப்பதித்துள்ளது.

மலேசிய திரையுலக வரலாற்றில் தமிழ்ப்படம் ஒன்று இடைவிடாமல், திரையிடப்பட்டு சாதனைப் படைத்திருப்பது இதுவே முதல் முறையாகும். மேற்கண்ட நேரத்தில் இந்த இடைவிடாத திரையீட்டின் வழி 600 டிக்கேட்டுகள் விற்பனையாகியுள்ளன.

இந்நிகழ்வில் ரஜினி ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் போப்கோன் சாப்பிடும் போட்டி, ரஜினி நடித்த திரைப்படத்தில் 30 வினாடிகளில் கதைக்கூறும் போட்டி நடத்தப்பட்டதுடன் வெற்றியாளர்களுக்கு திரைப்பட வவுச்சர்கள் மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜெயீலரின் இடைவிடாத திரையீட்டின் மூலம் சாதனைப்படைத்ததிற்காக நிகழ்வில் கலந்து கொண்ட மலேசிய சாதனை புத்தகத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி குமாரி லீ, Five Star Trading- யின் தலைமை நிர்வாகி டாக்டர் சாய் சுதனுக்கு மலேசிய சாதனை புத்தகத்திற்கான நற்சான்றிதழை வழங்கி சிறப்பு செய்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

24 மணி நேர இடைவிடாத திரையீடு மலேசிய சாதனைப் புத்தகத்தில் ... | Thisaigal News