கோலாலம்பூர், டிசம்பர்.20-
அடுத்த ஆண்டு, 10 நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணங்களைத் தொடர்ந்து நிலை நிறுத்த அரசாங்கம் முடிவெடுத்திருக்கும் நிலையில், சாலைப் பயனாளர்கள் சீரான, தரமான நெடுஞ்சாலையைப் பயன்படுத்த அது வழிவகை செய்யும் என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியமான எல்எல்எம் தெரிவித்துள்ளது.
நெடுஞ்சாலை செயல்பாடுகளும், அதன் பராமரிப்புகளும் நிர்ணயம் செய்யப்பட்ட தரநிலைகளுக்கு ஏற்ப இருப்பதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்று அதன் தலைமை இயக்குநர் சஸாலி ஹாருன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நெடுஞ்சாலை ஓய்விடங்களும், சேவையகங்களும், மின்சார வாகனச் சார்ஜர்கள் உள்ளிட்ட நவீன வசதிகளோடு மேம்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில் வாகன நெரிசலைக் குறைப்பதற்கும், பயண நேரத்தை மிச்சமிடுவதற்கும் போக்குவரத்து ஓட்ட மேலாண்மைக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் சஸாலி ஹாருன் தெரிவித்துள்ளார்.
மக்களின் நலனைப் பாதுகாக்க, நாடு முழுவதும் உள்ள 10 முக்கிய நெடுஞ்சாலைகளின் டோல் கட்டண விகிதங்கள் தொடர்ந்து நிலை நிறுத்தப்படும் என பொதுப்பணித்துறை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி நேற்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








