கோலாலம்பூர், அக்டோபர்.27-
16 வயதுக்குக் கீழ்பட்டவர்கள், விவேகக் கைப்பேசியைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க முத்திரையுடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பொய்யானதாகும் என்று பிரதமர் துறை விளக்கம் அளித்துள்ளது.
இத்தகைய ஓர் அறிக்கையைப் பிரதமர் துறை வெளியிடவில்லை என்று அது விளக்கம் அளித்துள்ளது.
இது பொன்ற பொய்யான அறிக்கையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்னதாக, அந்த அறிக்கையின் உள்ளடக்கத்தின் உண்மைத் தன்மையை உறுதிச் செய்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு பிரதமர் துறை அறிவுறுத்தியது.








