Oct 11, 2026
Thisaigal NewsYouTube

ஆசியான், வளைகுடா ஒத்துழைப்பு மன்றம் ஆகியவை நிலைத்தன்மையின் நங்கூரம்: பிரதமர் வர்ணனை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆசியான், வளைகுடா ஒத்துழைப்பு மன்றம் ஆகியவை நிலைத்தன்மையின் நங்கூரம்:  பிரதமர் வர்ணனை

கோலாலம்பூர், மே.27-

ஆசியான் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு மன்றமான ஜிசிசி ஆகியவை பிராந்தியத்தின் நிலைத்தன்மைக்கு நங்கூரமாகவும், முக்கியக் கேந்திரமாகவும் விளங்குகின்றன என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புகழ்மாலை சூட்டினார்.

கோலாலம்பூரில் நடைபெற்று வரும் 46 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று செவ்வாய்க்கிழமை, ஆசியான் தலைவர்களுடனான விவாதத்தின் போது பேசிய டத்தோஸ்ரீ அன்வார், ஆசியான் கூட்டமைப்பு துடிப்பாகச் செயல்படுவதற்கும், சரியான வழித்தடத்தில் செல்வதற்கும், பதில் அளிக்கக்கூடிய ஒரு பிராந்திய அமைப்பாக விளங்குவதற்கும் இந்த ஒத்துழைப்பு அவசியமாகும் என்றார்.

ஆசியான் மற்றும் ஜிசிசி உறவு, பிராந்தியங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும், மீள்தன்மையை உருவாக்குவதிலும் முக்கியப் பங்காற்ற முடியும் என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை