Oct 17, 2026
Thisaigal NewsYouTube

சம்பந்தப்பட்ட சந்தேகப்பேர்வழி நாளை குற்றஞ்சாட்டப்படுவார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சம்பந்தப்பட்ட சந்தேகப்பேர்வழி நாளை குற்றஞ்சாட்டப்படுவார்

நவ. 12-

தனது காதலை நிராரித்து விட்ட பெண்ணையும், அவரின் கணவரையும் கத்தியால் குத்தி கொலை செய்ததாக நம்பப்படும் 32 வயது நபர், நாளை புதன்கிழமை காலை 9 மணிக்கு குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார்.

கடுமையான காயங்களுடன் தற்போது பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் அந்த நபர் மருத்துவமனையிலேயே மாஜிஸ்திரேட் ஒருவரின் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று தீமோ லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் Lee Swee Sake தெரிவித்தார்.

பினாங்கு, Bandar Baru Farlim, Lengkok Angsana- அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் கடந்த வியாழக்கிழமை மதியம் 12.55 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் 30 வயது பெண்ணையும், அவரின் 62 வயது தந்தையையும் சம்பந்தப்பட்ட நபர் குத்திக்கொன்றதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த நபர், தன்னைத் தானே கத்தியால் காயப்படுத்திக்கொண்டதாக சொல்லப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →