கோலாலம்பூர், ஜூலை.28-
மனித வள துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அப்துல் ரஹ்மான் முகமட் இன்று மக்களவையில், நாட்டின் எரிவாயு குழாய் அமைப்பு பாதுகாப்பாக இருப்பதாகவும், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையால் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் உறுதியளித்தார்.
புத்ரா ஹைட்ஸில் நடந்த எரிவாயு குழாய் வெடிப்புச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த சுபாங் ஜெயா, ஜேஎம்ஜி, ஜேகேஆர், ஜேபிபிஎம் மற்றும் பிடிஆர்எம் ஆகியவை இணைந்து நடத்தியத் தொழில்நுட்ப விசாரணையில், நிலம் உறுதி இழப்பு மற்றும் நீர் குவிப்பு காரணமாக வெல்டட் மூட்டில் இயந்திர சோர்வு காரணமாக வெடிப்பு ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டது. நிலப்பரப்பை மாற்றும் மனித செயல்பாடுகளும் மண்ணின் உறுதியற்றத்தன்மைக்குப் பங்களிக்கின்றன.
குழாய்கள் அனைத்துலகத் தரத்தை பூர்த்தி செய்தாலும், டோஷ் உடனடி மேம்பாட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஜியோ-பிக் மற்றும் மின்காந்த லொக்கேட்டரைப் பயன்படுத்தி தொழில்நுட்ப மதிப்பீடு,அதிக ஆபத்துள்ள பகுதிகளின் நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் ரோந்து, விரிவாக்கப்பட்ட புவி அபாய மதிப்பீடு மற்றும் அவசரகால செயல் திட்டம், உள்ளூர் சமூகங்களுக்கானப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரம் ஆகியவையும் அவற்றில் அடங்கும்.
மதானி மலேசியா கட்டமைப்பின் கீழ் நல்வாழ்வு மற்றும் பொறுப்புக்கூறல் கொள்கைகளுக்கு இணங்க எரிவாயு குழாய் அமைப்பின் ஒருமைப்பாட்டை உறுதிச் செய்ய கெசுமா உறுதிப் பூண்டுள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
அனைத்து தரப்பினரும் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டம் 1994 (சட்டம் 514) உடன் இணங்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். சட்ட மீறல் ஏற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாரவர்.
KSM








