கோத்தா பாரு, ஜூலை.20-
தங்களின் கைப்பேசியில் ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்திருந்த இரண்டு மாணவர்கள் உட்பட மூன்று இளைஞர்களுக்கு கோத்தா பாரு, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று தலா 3 ஆயிரம் ரிங்கிட் முதல் 4 ரிங்கிட் வரை அபராதம் விதித்தது.
22 க்கும் 47 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூவரும் தங்களுக்கு எதிரானக் குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் வான் முகமட் இஸாட் வான் அப்துல்லா தெரிவித்தார்.
இந்த மூவரும் கடந்த ஜுன் 18 ஆம் தேதி கோத்தா பாரு, கம்போங் பூலாவ் பெலாச்சான் பஞ்சோரில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








