Sep 25, 2026
Thisaigal NewsYouTube
அனாக் புக்கிட் ரயில் நிலையம் திறக்கப்படாததால் பயணிகள் பாதிப்பு
தற்போதைய செய்திகள்

அனாக் புக்கிட் ரயில் நிலையம் திறக்கப்படாததால் பயணிகள் பாதிப்பு

Share:

கெடா, அலோர் ஸ்டார் அருகிலுள்ள அனாக் புக்கிட் கேடிஎம்பி ரயில் நிலையத்தின் பிரதான வாயில், இன்று அதிகாலை வழக்கமான நேரத்தில் திறக்கப்படாததால் சுமார் 25 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

காலை 5.30 மணிக்கு நிலையம் செயல்படத் தொடங்க வேண்டிய நிலையில், பணிக்கு நியமிக்கப்பட்ட ஊழியர் உடல்நலக் காரணமாக பணிக்கு வரவில்லை.

காலை 5.55 மணியளவில் தகவல் கிடைத்ததும் மாற்று ஊழியரை பணியில் ஈடுபடுத்த கேடிஎம்பி உடனடி நடவடிக்கை எடுத்தது. ஆனால் மாற்று ஊழியர் காலை 6.30 மணிக்கே வந்ததால் நிலையத்தின் பிரதான வாயில் அதன் பின்னரே திறக்கப்பட்டது.

இதனால் காலை 5.58 மற்றும் 6.18 மணிக்கு புறப்பட வேண்டிய 2901 மற்றும் 2903 ஆகிய இரண்டு கேடிஎம் கொமுட்டர் ரயில் சேவைகளைப் பயணிகள் தவறவிட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து கேடிஎம்பி மேலதிக விசாரணை நடத்தி வருவதுடன், நிலையங்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் திறக்கப்படுவதையும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியையும் உறுதி செய்வதே முன்னுரிமை எனத் தெரிவித்துள்ளது.

 

Related News