Sep 24, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் பிந்தாங்-இல் சுகாதாரமற்ற 6 உணவகங்களை மூட டிபிகேஎல் உத்தரவு
தற்போதைய செய்திகள்

புக்கிட் பிந்தாங்-இல் சுகாதாரமற்ற 6 உணவகங்களை மூட டிபிகேஎல் உத்தரவு

Share:

கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங், ஜாலான் அலோர் பகுதியில் போதிய சுகாதாரக் குறைபாடுடன் இயங்கிவந்த 6 உணவகங்களை உடனடியாக மூடுவதற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல் நேற்று இரவு உத்தரவிட்டுள்ளது.

சுகாதார அமைச்சுடன் இணைந்து மொத்தம் 45 உணவகங்களில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சமையலறை அசுத்தமாக இருந்தது, கொழுப்புப் பொறிகள் இல்லாதது, கரப்பான் பூச்சி மற்றும் எலித் தொல்லை, ஊழியர்கள் டைபாய்டு தடுப்பூசி போடாதது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக, உணவகங்களுக்கு 74 நோட்டீஸ்கள் மற்றும் அபராதங்கள் விதிக்கப்பட்டன. உணவுகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக டிபிகேஎல் தெரிவித்துள்ளது.

Related News