சிபு, ஆகஸ்ட்.05-
சரவாக், சிபுவில் சாக்கடைக் குழிக்குள் 2 வயது சிறுவன் விழுந்து மரணமுற்றான். இந்தச் சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் சிபு, ஜாலான் பெடாடாவில் நிகழ்ந்தது.
இச்சம்பவம் தொடர்பில் மாலை 6.29 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக சரவாக், தீயணைப்பு, மீட்புப்படை இலாகா தெரிவித்தது. சிபு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சாக்கடைக் குழிக்குள் சிறுவன் விழுந்தது உறுதிச் செய்யப்பட்டது.
மீட்புப் பணி துரித வேகத்தில் மேற்கொள்ளப்பட்டது. சாக்கடைக் குழாய்களுக்கு மத்தியில் சிறுவனின் உடல் சிக்கிக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரவு 7 மணியளவில் உடல் மீட்கப்பட்டது என்று அவ்விலாகாவின் பேச்சாளர் தெரிவித்தார்.








