Jul 2, 2026
Thisaigal NewsYouTube
சாஹிட் தொடர்பான டிஎன்ஏஏ விவகாரம்: வழக்கறிஞர் மன்றத்திற்கு சாதகமாக அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பு
தற்போதைய செய்திகள்

சாஹிட் தொடர்பான டிஎன்ஏஏ விவகாரம்: வழக்கறிஞர் மன்றத்திற்கு சாதகமாக அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பு

Share:

லஞ்ச ஊழல் வழக்கில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடிக்கு வழங்கப்பட்ட டிஎன்ஏஏ எனப்படும் வழக்கிலிருந்து 'விடுவிப்பு' முடிவை எதிர்த்து மலேசிய வழக்கறிஞர் மன்றம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவிற்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன் மூலம் ஜாஹிட்டுக்கு வழங்கப்பட்ட டிஎன்ஏஏ எனப்படும் வழக்கிலிருந்து 'விடுவிப்பு' முடிவை எதிர்த்து சட்டரீதியாக சவால் விடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இன்று வழக்கறிஞர் மன்றத்தின் மனுவை விசாரித்த ஃபைசா ஜமாலுடின் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, அம்மனு அற்பமானது அல்ல என்றும், வழக்கின் முழுமையான விசாரணை கட்டத்தில் பரிசீலிக்கப்பட வேண்டிய விவாதத்துக்குரிய அம்சங்களை அது எழுப்புவதாகவும் தீர்ப்பளித்தது.

மேலும், அப்பீல் நீதிமன்றம், நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கையைத் தொடங்க வழக்கறிஞர் மன்றத்திற்கு அனுமதி வழங்கியதுடன், முழுமையான விசாரணைக்காக இந்த வழக்கை மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்ப உத்தரவிட்டது.

Related News

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ