Feb 18, 2026
Thisaigal NewsYouTube
கூலாயில் மோட்டார் விபத்து: சம்பவ இடத்திலேயே பலியான தம்பதி
தற்போதைய செய்திகள்

கூலாயில் மோட்டார் விபத்து: சம்பவ இடத்திலேயே பலியான தம்பதி

Share:

கூலாய், பிப்ரவரி.18-

கூலாய் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் கிலோமீட்டர் 37.4- இல் மோட்டார் சைக்கிள் ஒன்று சாலை தடுப்பு சுவரில் மோதியதில், கணவன் – மனைவி உயிரிழந்தனர்.

நேற்று மதியம் 1.40 மணியளவில் நடந்த இச்சம்பவத்தின் போது, 55 வயதான ஆடவரும், அவரது 49 வயதான மனைவியும் சம்பவ இடத்திலேயே மாண்டதாக கூலாய் மாவட்ட போலீஸ் உதவி ஆணையர் டான் செங் லீ தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திக் கொண்டிருந்த அந்த ஆடவர், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்புச் சுவரில் மோதியதில், இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே அவர்கள் இருவரும் மரணமடைந்துள்ளனர்.

இச்சம்பவமானது 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1)-ன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

Related News

அரசியல் விமர்சகர் முரே ஹண்டருக்கு எதிரான அவதூறு வழக்கைத் திரும்பப் பெற்றது எம்சிஎம்சி

ரொட்டி செனாய், பானத்திற்கு 120 வெள்ளி கட்டணம்  வசூலித்தது ஏன்? -  சிரம்பான் உணவகத்திற்கு அமைச்சு நோட்டீஸ்

அதிகரித்து வரும் குடும்ப உறுப்பினர்களின் கொலை - தற்கொலைச் சம்பவங்கள்: உள்ளூர் சமூக ஆதரவு மையங்களை மேம்படுத்த அமைச்சர் நான்சி சுக்ரி உறுதி

காச நோய் தொற்றுக்கு உள்ளானவர்களில் 85 விழுக்காட்டினர் உள்ளூர்வாசிகள்: சுகாதாரத்துறை தகவல்

செராதிங் குடும்பக் கொலை - தற்கொலை துயரச் சம்பவம்: பகாங் சுல்தான் ஆழ்ந்த வருத்தம்

அம்பாங்கில் ஏற்பட்ட தீ விபத்து: 2 வீடுகள், 2 கார்கள் சேதம்