போலி ஆயுதங்களை வைத்திருப்பது, வாங்குவது, விற்பது, விநியோகிப்பது போன்ற எந்த செயலையும் காவல் துறை வன்மையாகக் கண்டிக்கிறது என சிலாங்கூர் மாநிலக் காவல் துறைத் தலைவர் டத்தோ ஹுசெயின் ஓமார் கான் தெரிவித்தார்.
இணையம் வாயிலாக இது மாதிரியான ஆயுதங்கள் வாங்கப்படுவதும் விற்கப்படுவதும் குறித்து தமது தரப்புக்கு பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து ஹுசெயின் ஓமார் கான் இவ்வாறி கூறினார்.
யாரும் இதுபோன்ற எந்தச் செயலிலும் ஈடுபட வேண்டாம் எனவும் மீறினால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் மேலும் சொன்னார்.
இது போன்ற போலி ஆயுதங்களைப் பயன்படுத்துவதாலும் பலத்தக் காயங்கள் ஏற்படும் எனக் கூறிய அவர், குற்றவியல் சட்டம் 324இன் படியும் ஒரு வேளை மரணம் நேர்ந்தால் குற்றவியல் சட்டம் 302இன் படியும் தண்டிக்கப்படுவார்கள் எனவும் ஹுசெயின் ஓமார் கான் குறிப்பிட்டார்.








