புக்கிட் காயு ஹீத்தாம், அக்டோபர்.26-
மிகவும் நேர்த்தியான கார்ப்பரேட் உடையில் வந்த ஆறு வங்காளதேசிகள், முக்கியமான நிகழ்ச்சிக்குச் செல்வதாகக் கூறி மலேசியாவிற்குள் நுழைய முயன்ற போது நேற்றுத் திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்களை விசாரித்தபோது, இவர்கள் உண்மையான சுற்றுலாப் பயணிகள் இல்லை என்பதையும், நாட்டின் எல்லைக்குள் நுழையத் தேவையான விதிமுறைகளை நிறைவு செய்யவில்லை என்பதையும் எல்லைக் கட்டுப்பாட்டு, பாதுகாப்புப் படையான AKPS கண்டறிந்தது.
பினாங்கு ஆயர் ஈத்தாமில் உள்ள ICQS சோதனைச் சாவடி வழியாக வந்த இக்குழுவினர், சட்டத்திற்குப் புறம்பான நோக்கங்களுக்காக நாட்டின் நுழைவாயில்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, வந்த வழியே சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக புக்கிட் காயு ஹீத்தாம் AKPSஇன் மூத்த உதவி ஆணையர் முகமட் நாசாருடின் எம் நாசீர் தெரிவித்தார். மலேசியாவின் நுழைவாயில்கள் எப்போதும் சிறந்த கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிச் செய்வதில் AKPS உறுதியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.








