Sep 28, 2026
Thisaigal NewsYouTube
கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது
தற்போதைய செய்திகள்

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

Share:

கூலிமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, பொது செயல்பாட்டுப் படையினர் நடத்திய அதிரடிச் சோதனையில், சட்டவிரோதமாக பிளாஸ்டிக் கழிவுகளை செயலாக்கும் மையத்தில் பணியாற்றியதாக, சந்தேகத்தின் பேரில் ஏழு பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான உள்ளூர் ஆடவர், அந்த வளாகத்தின் பராமரிப்பாளராகப் பணியாற்றியதாக நம்பப்படுகிறது.

மேலும், அங்கு பணியாற்றியதாக சந்தேகிக்கப்படும் நான்கு வங்காள தேச ஆடவர்களும், இரண்டு நேபாள நாட்டைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக வடக்குப் படைப்பிரிவுத் தளபதி பல்வீர் சிங் மகிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இச்சோதனையானது பிற்பகல் 3 மணியளவில் மேற்கொள்ளப்பட்டதாகவும், 18-வது படை பிரிவைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரிகள், கூலிம் சுற்றுச்சூழல் துறையுடன் இணைந்து இந்நடவடிக்கை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News