Aug 6, 2026
Thisaigal NewsYouTube
மாரடைப்புக்கு ஆளான லோரி ஓட்டுநர்: நான்கு வாகனங்களை மோதித் தள்ளினார்
தற்போதைய செய்திகள்

மாரடைப்புக்கு ஆளான லோரி ஓட்டுநர்: நான்கு வாகனங்களை மோதித் தள்ளினார்

Share:

ஜோகூர்பாரு, டிச. 23-


லோரியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று மாரடைப்புக்கு ஆளான அதன் ஓட்டநர், வேகக்கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து அந்த லோரி, நான்கு வாகனங்களை மோதித்தள்ளியது.

இச்சம்பவவம் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் ஜோகூர்பாரு, ஜாலான் ஸ்டேஷனில் நிகழ்ந்தது. மருந்துப்பொருட்களை ஏற்றிக்கொண்டு ஜோகூர் பாருவை நோக்கி 30 வயது மதிக்கத்தக்க அந்த லோரி ஓட்டுநர் சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக ஜோகூர்பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவுப் செலாமாட் தெரிவித்தார்.

சாலையின் வலது புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு வாகனங்களை மோதித் தள்ளிய அடுத்த சில விநாடிகளிலேயே அந்த லோரி ஓட்டுநர் மரணம் அடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News