Dec 22, 2025
Thisaigal NewsYouTube
கம்பாரில் 54 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடைவீதி தீயில் எரிந்து நாசம்
தற்போதைய செய்திகள்

கம்பாரில் 54 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடைவீதி தீயில் எரிந்து நாசம்

Share:

ஈப்போ, டிசம்பர்.22-

கம்பார், கம்போங் மஸ்ஜிட் பகுதியில், இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், 54 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடைவீதியானது முற்றிலும் எரிந்து நாசமானது.

இத்தீ விபத்து குறித்து இன்று அதிகாலை 3.10 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் உதவி இயக்குநர் ஷாஸ்லின் முகமட் ஹனாஃபியா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, கம்பார், கோப்பேங் மற்றும் தாப்பா தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த 25 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்றாலும், இத்தீ விபத்தில், 54 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடைவீதியானது முற்றிலும் எரிந்து விட்டதாகவும், அங்குள்ள கடைகள் எதையும் மீட்க முடியவில்லை என்றும் ஷாஸ்லின் முகமட் ஹனாஃபியா தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், இச்சம்பவத்தில் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News