யுஐடிஎம் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் குறித்து முதலில் முழுமையாக ஆய்வு செய்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
யுஐடிஎம் துணைவேந்தர், உயர்கல்வி அமைச்சு மற்றும் பிரதமர் துறை ஆகியவை இணைந்து இந்த விவகாரம் தொடர்பான அறிக்கையை ஆராய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
2023ஆம் ஆண்டு யுஐடிஎம் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படும் 157 மில்லியன் ரிங்கிட் இழப்பு தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விசாரணை நடத்தியது.
நிர்வாகத்தில் சாதாரணக் குறைபாடுகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்து தேவையான மாற்றங்களைச் செய்யலாம் என்றும், ஆனால் முறைகேடு இடம் பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அன்வார் தெரிவித்தார்.








