Jun 30, 2026
Thisaigal NewsYouTube
19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்
தற்போதைய செய்திகள்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

Share:

நாட்டில் 19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகச் சமூக ஊடகங்களில் பரவும் தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான பெர்ஹிலிட்டன் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து பெர்ஹிலிட்டன் தலைமை இயக்குநர் ஜெனரல் அப்துல் காதிர் அபு ஹாஷிம் வெளியிட்டுள்ள அறிக்கையில் யானைகள் விற்கப்படவில்லை, அவை பாதுகாப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளுக்காக ‘இரவல் அடிப்படையில்’ மட்டுமே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

நோய் பரவல் அல்லது இயற்கை சீற்றங்களால் ஒரே இடத்தில் மொத்தமாக யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க, ‘மக்கள்தொகை காப்பீடு’ அடிப்படையில் அவை வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்படுகின்றன.

இந்த நடவடிக்கை மனித-யானை மோதல்களைக் குறைக்கவும், இனப் பெருக்கத்தைப் பாதுகாக்கவும் உதவும். எனவே இது தொடர்பாக தவறான தகவல்களைப் பகிர வேண்டாம் என அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News