Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மலேசியாவின் நிலைப்பாடு உறுதியானது, பிரதமர் திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

மலேசியாவின் நிலைப்பாடு உறுதியானது, பிரதமர் திட்டவட்டம்

Share:

பாலஸ்தீன மக்களுக்கு குரல் எழுப்புவதில் மலேசியா கொண்டிருக்கும் உறுதியான நிலைப்பாடு தொடர்பில் சில மேற்கத்திய நாடுகளிடமிருந்து வரக்கூடிய எதிர்விளைவுகளை மலேசியா அறிந்துள்ளது. இருந்த போதிலும் பாலஸ்தீன விவகாரத்தில் காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் கொடுமைகள் குறித்து குரல் எழுப்புவதை தவிர மலேசியாவிற்கு வேறு வழியில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன தலைநகர் காஸாவில் இப்போது நிலைமை மிக மோசமாக இருக்கிறது. குழந்தைகள், சிறார்கள், கர்ப்பிணிகள், மூத்த குடிமக்கள் என அனைவரும் உணவின்றி வாடுகின்றனர். உயிர் சம்பந்தப்பட்ட கொலைகள் அங்கு நிகழ்கின்றன. எனவே பாலஸ்தீன மக்களின் சொல்லொண்ணா துயரத்தை கண்டு மலேசியாவினால் பாராமுகமாக இருந்து விட முடியாது என்று பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

Related News