Dec 12, 2025
Thisaigal NewsYouTube
கெடா மாநில அரசின் மேல்முறையீட்டை நிராகரித்தது மேல்முறையீட்டு நீதிமன்றம்
தற்போதைய செய்திகள்

கெடா மாநில அரசின் மேல்முறையீட்டை நிராகரித்தது மேல்முறையீட்டு நீதிமன்றம்

Share:

புத்ராஜெயா, டிசம்பர்.12-

கெடா மாநிலத்தில் லாட்டரி நம்பர் கடைகள் மற்றும் சூதாட்ட மையங்களின் லைசென்சுகளைப் புதுப்பிப்பதில்லை என்ற தங்களின் முடிவை மீட்டுத் தருமாறு கெடா மாநில அரசாங்கம் செய்து கொண்ட மேல்முறையீட்டை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கெடா மாநிலத்தில் நம்பர் கடைகள் மற்றும் சூதாட்ட மையங்களை மூடும் நோக்கில் அவற்றின் லைசென்ஸ்சுகளைப் புதுப்பிப்பதில்லை என்ற மாநில அரசாங்கத்தின் முடிவை உறுதிச் செய்யுமாறு கெடா அரசு செய்து கொண்ட மேல்முறையீட்டு வழக்கு மனுவில் தகுதிபாடுயில்லை என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற சபா, சரவாக் மாநிலங்களுங்களுக்கான தலைமை நீதிபதி அஸிஸா நவாவி தெரிவித்தார்.

லாட்டரி நம்பர் கடைகள் மற்றும் சூதாட்ட மையங்கள் ஆகியவற்றின் லைசென்சுகளைப் புதுப்பிப்பதில்லை என்ற கெடா மாநில அரசாங்கத்தின் முடிவு அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானதாகும் என்று நீதிபதி அஸிஸா சுட்டிக் காட்டினார்.

கெடா மாநிலத்தில் சூதாட்டங்கள் மற்றும் நம்பர் கடைகளைத் துடைத்தொழிக்க வேண்டும் என்ற நோக்கில் மாநில அரசாங்கம் இந்த முடிவைச் செய்துள்ளதாக மாநில மந்திரி பெசார் சனூசி நோர் தமது அப்பிடெவிட் மனுவில் குறிப்பிட்டுள்ளது ஏற்புடைய நடவடிக்கை அல்ல என்பதையும் மற்றொரு நீதிபதியான லிம் ஹோக் லெங் சுட்டிக் காட்டினார்.

காரணம், லாட்டரி நம்பர் கடைகள் மற்றும் சூதாட்ட மையங்களின் செல்பாடுகள் அனைத்தும் புத்ராஜெயாவில் உள்ள நிதி அமைச்சின் அதிகார வரம்புக்கு உட்பட்டதே தவிர மாநில அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது அல்ல என்பதை அவர் தெளிவுபடுத்த்தினார்.

எனவே சூதாட்ட மையங்களைக் கெடா மாநில அரசு, சட்டவிரோதமாகக் கருத முடியாது. அவ்வாறு செய்வது மத்திய அரசாங்கத்தின் அதிகார வரம்பில் தலையிடுவதற்கு ஒப்பாகும் என்று நீதிபதி தமது தீர்ப்பில் சுட்டிக் காட்டினார்.

Related News