நேற்று அதிகாலை புக்கிட் அந்தராபங்சா பகுதியில் தொடங்கி பத்து கேவ்ஸ் வரை, சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டுத் தயாரிப்புக் கார் ஒன்றைத் துரத்திய போலீசார், அக்காரில் இருந்த இரண்டு உள்ளூர் ஆடவர்களைக் கைது செய்துள்ளனர்.
அதிகாலை சுமார் 4.36 மணியளவில் சந்தேகத்திற்கிடமான அந்த சுபாரு இரக வாகனம் குறித்து அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து நடவடிக்கை தொடங்கியதாக அம்மாவட்ட போலீஸ் தலைவர் கைருல் அனுவார் காலிட் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, புக்கிட் அந்தராபங்சா தொடங்கி பத்து கேவ்ஸ் வரை அக்காரை துரத்திச் சென்ற போலீசார், காரை நிறுத்தி அதிலிருந்த இருவரையும் கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், அந்த சுபாடு கார் போலி பதிவு எண்களுடன் பயன்படுத்தப்பட்ட ‘நகல் செய்யப்பட்ட வாகனம்’ என சந்தேகிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது சிறுநீர் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.








