கோலாலம்பூர், அக்டோபர்.08-
கடந்த 40 ஆண்டுகளாக நான்கு மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களை உற்பத்தி செய்த பின்னர், புரோட்டோன் நிறுவனம், ஷா ஆலமில் உள்ள அதன் வாகன அசெம்பிளி செயல்பாட்டை அதிகாரப்பூர்வமாக நிறுத்தியுள்ளது.
சாகா, பிரசோனா, எக்ஸ் 50, எக்ஸ் 70 மற்றும் எஸ் 70 உள்ளிட்ட உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து புரோட்டோன் வாகனங்களும் இப்போது பேரா, தஞ்சோங் மாலிமில் உள்ள ஆட்டோமோட்டிவ் ஹைடெக் பள்ளத்தாக்கில் உள்ள தேசிய வாகன உற்பத்தி வளாகத்தில் தயாராகின்றன. புரோட்டோனின் கூற்றுப்படி, ஷா ஆலம் ஆலை அதன் இறுதி வாகனமான சாகா-ஐ ரகத்தை கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியிட்டது.
அதைத் தொடர்ந்து, ஷா ஆலம் ஆலையில் பணியாற்றிய 1,400 தயாரிப்பு ஊழியர்கள் தஞ்சோங் மாலிமுக்கு குடிபெயர்ந்து உள்ளனர். ஷா ஆலாம் ஆலை ஒரே இரவில் மூடப்படவில்லை என்று அந்த நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








