Nov 10, 2026
Thisaigal NewsYouTube

அமைச்சரவை மாற்றம் குறித்து இப்போது பேசுவது சரியல்லை - அன்வார் விளக்கம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அமைச்சரவை மாற்றம் குறித்து இப்போது பேசுவது சரியல்லை - அன்வார் விளக்கம்

அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படுவது குறித்து இப்போதைக்கு பேசுவது மிகவும் முன்கூட்டியதாகும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக் வீட்டுக் காவல் விவகாரத்தில், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் பதவி விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் பிரதமர் அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் பதிலளித்துள்ளார்.

கோலாலம்பூரில் உள்ள மிடேக் (MITEC) எனப்படும் மலேசிய அனைத்துலக வர்த்தகம் மற்றும் கண்காட்சி மையத்தில் இன்று நடைபெற்ற அனைத்துலக கட்டுமான வாரம் மற்றும் BuildXPO Malaysia 2026 நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், அமைச்சரவை மாற்றம் குறித்து இப்போது பேச வேண்டாம் என்றார்.

இதற்கிடையில், நாளை நடைபெறவுள்ள போக்குவரத்து அமைச்சின் நிகழ்ச்சி, அமைச்சுப் பணியாளர்களுடனான தனது கடைசி நிகழ்ச்சியாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம் என அந்தோணி லோக் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும், அது தனது பிரியாவிடை நிகழ்ச்சியாக இருக்குமா? என்பதை அவர் உறுதிப்படுத்தவில்லை.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →