Nov 10, 2026
Thisaigal NewsYouTube

ஈப்போ விமான நிலையத்தில் 19 கிலோ கஞ்சாவுடன் சிங்கப்பூர் பிரஜை கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஈப்போ விமான நிலையத்தில் 19 கிலோ கஞ்சாவுடன் சிங்கப்பூர் பிரஜை கைது

பேராக் மாநிலம், ஈப்போவில் உள்ள சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்தில், சுமார் 1.52 மில்லியன் மதிப்புள்ள 19.04 கிலோ போதைப்பொருளைப் பறிமுதல் செய்த போலீசார், 29 வயது சிங்கப்பூர் ஆடவர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் நடந்ததாக பேராக் மாநில போலீஸ் தலைவர் அல்வி ஸைனால் அபிடின் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் போது, விமான நிலையத்தில் பயணப் பொதிகளைச் சோதனை செய்து கொண்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமாகப் பயணப் பெட்டியுடன் வந்த அந்த நபரைச் சோதனையிட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், அந்த நபர், ஈப்போவிலிருந்து சிங்கப்பூர் சென்று, அங்கிருந்து இங்கிலாந்தின் லண்டன் நகருக்குப் பயணிக்கத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரது பயணப் பெட்டியைத் தொடர்ந்து சோதனையிட்டபோது, 36 பிளாஸ்டிக் பொட்டலங்களில் காய்ந்த இலைகள் போன்ற பொருட்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவை கஞ்சா மலர்கள் எனச் சந்தேகிக்கப்படுவதாகவும், அவற்றின் மொத்த எடை 19.04 கிலோ என்றும், சந்தை மதிப்பு சுமார் 1.52 மில்லியன் ரிங்கிட் என்றும் அல்வி ஸைனால் அபிடின் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →