Nov 10, 2026
Thisaigal NewsYouTube

வேப் தடையை அமல்படுத்துவதற்கான கால அட்டவணையைத் தெளிவுபடுத்த மருந்தாளுநர்கள் கோரிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வேப் தடையை அமல்படுத்துவதற்கான கால அட்டவணையைத் தெளிவுபடுத்த மருந்தாளுநர்கள் கோரிக்கை

நாடு முழுவதும் வேப் பயன்பாட்டுக்குத் தடை விதிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த ஆண்டின் மத்தியகால இலக்கை அரசாங்கம் தவறவிட்டுள்ளது.

இதனால், தடையை எப்போது அமல்படுத்தப் போகிறது என்பதை அரசாங்கம் தெளிவாக அறிவிக்க வேண்டும் என மருந்தாளுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக, இளம் வயதினரிடையே வேப் பழக்கம் அதிகரிப்பது மற்றும் போதைப்பொருள் கலந்த வேப் திரவங்கள் சந்தையில் கிடைப்பது குறித்த கவலைகளும் எழுந்துள்ளன.

இது குறித்து எம்பிஎஸ் எனப்படும் மலேசிய மருந்தாளுநர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் அம்ராஹி புவாங் கூறுகையில், வேப் பயன்பாட்டுக்குக் கட்டம் கட்டமாகத் தடை விதிப்பதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும், வேப் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் திரவ நிக்கோட்டினுக்கு மீண்டும் விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், வேப் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாகக் கூறிக் கொண்டே, நிக்கோட்டின் வேப் தயாரிப்புகள் தொடர்ந்து சந்தையில் விற்பனை செய்ய அனுமதிக்கும் வகையில் மற்றொரு விலக்கு குறித்து அரசாங்கம் ஆலோசிக்க முடியாது என்றும் அம்ராஹி புவாங் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →