Dec 8, 2025
Thisaigal NewsYouTube
2026 தேசிய சேவைப் பயிற்சித் திட்டம்: பெயர்களைப் பரிசோதித்துக் கொள்ளலாம்
தற்போதைய செய்திகள்

2026 தேசிய சேவைப் பயிற்சித் திட்டம்: பெயர்களைப் பரிசோதித்துக் கொள்ளலாம்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.08-

2026 ஆம் ஆண்டு தேசிய சேவை பயிற்சித் திட்டமான PLKN 3.0 இல் பங்கேற்கின்றவர்களின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மனுதாரர்கள், தங்கள் பெயர்களை இன்று முதல் சரிபார்த்துக் கொள்ளலாம் என்று தேசிய சேவை பயிற்சி இலாகா அறிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான தேசிய சேவைப் பயிற்சித் திட்டம் PLKN 3.0, அடுத்த ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 3 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

இந்தப் பயிற்சிகள் கோலாலம்பூர் இராணுவ முகாம், பட்டாளம் 515 ந்திலும் பகாங் Pekan, பட்டாளம் 505 ந்திலும் நடைபெறுகின்றன. தேர்வு செய்யப்பட்ட மனுதாரர்கள், ஏற்புடைய காரணமின்றி பயிற்சியில் பங்கு கொள்ளத் தவறுவார்களேயானால் தேசிய சேவைப் பயிற்சி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த இலாகா நினைவுறுத்தியுள்ளது.

Related News