தாப்பா, ஜூலை.22-
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் மூவர் உயிரிழந்த வேளையில் மேலும் மூவர் படுகாயத்திற்கு ஆளாகினர்.
இச்சம்பவம் இன்று காலை 11 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 328.9 ஆவது கிலோமீட்டரில் தாப்பா அருகில் நிகழ்ந்தது.
இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்ட இந்த விபத்தில் 70 க்கும், 76 க்கும் இடைப்பட்ட மூவர் உயிரிழந்ததாகத் தெரிக்கப்பட்டது.
இதர மூவர் கடுமையானக் காயங்களுடன் தாப்பா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தாப்பா மாவட்ட போலீஸ் தலைவர் ஜொஹாரி யாஹ்யா தெரிவித்தார்.








