கோத்தா பாரு, நவம்பர்.26-
கிளந்தானின் பெய்து வரும் அடை மழையில் கரைபுரண்டோடும் வெள்ளத்தில் சிக்கிய இருவர் காரோடு அடித்து செல்லப்பட்டதில் ஒருவர் மரணமுற்றார். மற்றொருவர் உயிர் பிழைத்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் தானா மேரா, ஜாலான் ஜெடோக், கம்போங் பத்து 5- வில் நிகழ்ந்தது. இதில் சித்தி காயா ஸாகாரியா என்பவர் உயிரிழந்தார். அவரின் உடல் காரோடு நீரில் சிக்கிய நிலையில் இன்று காலை 7.49 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.
அவருடன் பயணம் செய்த ஷாம்லா சுஸி அஹ்மாட் என்ற மாது, காரிலிருந்து குதித்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டார்.
அதிகாலையில் கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து தீயணைப்பு, மீட்புப்படை நீரில் அடித்து செல்லப்பட்ட மாதுவைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டது.








