Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மாணவி ஸாரா மரண விவகாரத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தாதீர்
தற்போதைய செய்திகள்

மாணவி ஸாரா மரண விவகாரத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தாதீர்

Share:

புத்ராஜெயா, ஆகஸ்ட்.18-

முதலாம் படிவ மாணவி ஸாரா கைரினா மகாதீர் மரண விவகாரத்தை ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டாம் என்று அனைத்து தரப்பினரையும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

பகடிவதையால் பாதிக்கப்பட்டவர்களின் மரண விவகாரத்தைப் பொய்யுரைக்கவும், அச்சுறுத்தவும் பயன்படுத்தப்படுவது அறவே ஏற்றுக் கொள்ள முடியாததாகும் என்று பிரதமர் நினைவுறுத்தினார்.

இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விஷயங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், வரம்பு மீறப்படுகிறது. ஆகக் கடைசியாக வெளியான தகவலில், ஸாராவின் உடலில் சவப் பரிசோதனை நடத்திய மருத்துவர் என்று ஒருவர் கூறிக் கொண்டு, ஆயிரக்கணக்கான மக்களின் சிந்தனையில் நஞ்சு விளைவித்து வருகிறார். உண்மையிலேயே என்ன நடக்கிறது என்று நண்பர்களின் மனைவிமார்கள் கேட்கும் அளவிற்கு நிலைமை மாறி வருகிறது.

ஸாராவின் மரணம் தற்போது மற்றவர்களின் முதுகில் குத்துவதற்கு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு பயன்படுத்தப்படுவது நிந்திக்கும் தன்மையிலானதாகும் என்று பிரதமர் நினைவுறுத்தினார்.

Related News