Dec 4, 2025
Thisaigal NewsYouTube
நீதித்துறை சுதந்திரத்தில் அத்துமீறியது இல்லை - பிரதமர் அன்வார் உறுதி
தற்போதைய செய்திகள்

நீதித்துறை சுதந்திரத்தில் அத்துமீறியது இல்லை - பிரதமர் அன்வார் உறுதி

Share:

47 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை எ​திர்நோக்கி​யிருந்த துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடிக்கு எதிரான ல​ஞ்ச ஊழல் வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டது குறித்து கடுமையாக குறைகூறப்பட்டாலும் நாட்டின் நீதி பரிபாலனத்துறையின் சுதந்திரத்தை தொடர்ந்து தற்காப்பதில் தாம் உறுதியாக இருந்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

நீதித்துறை சுதந்திரத்தில் தாம் என்றுமே அத்து​மீறியது கிடையாது என்றும் அத்து​மீறப் போவதில்லை என்றும் பிரதமர் உத்தரவாதம் அளித்தார்.​தமது தலைமையிலான மத்திய அரசாங்கம், நீதித்துறை சுதந்திரத்தில் தலையிட்டுள்ளதாக வதந்திகள் உலாவி வருவதை பிரதமர் ஒப்புக்கொண்டார். ஆனால் அது உண்மை அல்ல என்றும், அதில் அடிப்படையில்லை என்றும் பிரதமர் வாதிட்டார்.

கோலாலம்பூரில் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசியான் சட்டத்துறை மற்றும் ஆசியான் சட்டத்தறை மன்றத்தின் 14 ஆவது மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

Related News