சிரம்பான், செப்டம்பர்.08-
கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி போர்ட்டிக்சன், தஞ்சோங் ஆகாஸில் சுங்கை லிங்கி மேம்பாலத்திலிருந்து கார் ஒன்று ஆற்றில் விழுந்ததில் இரண்டு சிறார்கள் மரணம் அடைந்த சம்பவத்தில் குற்றத்தன்மையில்லை என்று நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் அல்ஸஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.
அந்த இரண்டு சிறார்கள் மரணம் அடைந்தது, நீரில் மூழ்கியது காரணமே தவிர அவர்களின் மரணத்தில் வேறு குற்றத்தன்மையில்லை என்று அல்ஸஃப்னி அஹ்மாட் குறிப்பிட்டார்.
போர்ட்டிக்சன் மருத்துவமனையில் அந்த இரண்டு சிறார்களின் உடல்களிலும் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி நடத்தப்பட்ட சவப் பரிசோதனையில் இவ்விவரம் தெரிய வந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.








