கோலாலம்பூர், அக்டோபர்.04-
அரசாங்க ஏஜென்சி ஒன்று சம்பந்தப்பட்ட விருந்து நிகழ்வில் மதுபானம் இருந்ததாக மஸ்ஜிட் தானா மாஸ் எர்மியாத்தி சம்சுடின் கூறியுள்ள குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று சுற்றுலா, கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் தியோங் கிங் சிங் தெரிவித்துள்ளார்.
அந்த நிகழ்வில் அரசாங்க ஏஜென்சிகள் சம்பந்தப்படவில்லை. மாறாக தொழில்துறையினரும், தனியார் துறையினரும் சம்பந்தப்பட்டு இருந்தனர் என்று தியோங் கிங் சிங் விளக்கம் அளித்தார்.
உணவு வகையும், மதுபானமும், மலேசிய சுற்றுலா ஊக்குவிப்பு வாரியத்தினால் ஏற்படுத்தப்பட்டது அல்ல என்பதையும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.








