Aug 13, 2026
Thisaigal NewsYouTube
குவாப் நிறுவனத்தின் ஈஃபிஷெரி முதலீடு ஓய்வூதியப் கொடுப்பனவுகளைப் பாதிக்காது: தெங்கு ஜப்ருல் விளக்கம்
தற்போதைய செய்திகள்

குவாப் நிறுவனத்தின் ஈஃபிஷெரி முதலீடு ஓய்வூதியப் கொடுப்பனவுகளைப் பாதிக்காது: தெங்கு ஜப்ருல் விளக்கம்

Share:

இந்தோனேசியாவின் ஈஃபிஷெரி நிறுவனத்தில் குவாப் ஓய்வூதிய நிதியம் மேற்கொண்டுள்ள முதலீடு, அரசு ஊழியர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவுகளையோ அல்லது அந்த நிதியத்தின் நிதி நிலையையோ பாதிக்காது என்று பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகரும் மிடா தலைவருமான டெங்கு டத்தோ ஶ்ரீ சப்ருல் அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகளுக்குப் பதிலளித்துப் பேசிய அவர், இணையத்தில் கூறப்படுவது போல மில்லியன் ரிங்கிட் அல்ல, மாறாக 163 மில்லியன் ரிங்கிட்டே ஈஃபிஷெரி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று தெளிவுபடுத்தினார். 2025-ஆம் ஆண்டின்படி குவாப் நிதியத்தின் மொத்த சொத்து மதிப்பான 195 பில்லியன் ரிங்கிட்டில் இந்த முதலீடு 0.1 விழுக்காட்டிற்கும் குறைவானதே ஆகும்.

சிங்கப்பூரின் தெமாசேக், ஜப்பானின் சாஃப்ட்பேங்க் போன்ற அனைத்துலக நிறுவனங்களுடன் இணைந்து, ஈஃபிஷெரி நிறுவனத்தின் 2.51 விழுக்காடு பங்குகளுக்காகவே குவாப் இந்த முதலீட்டைச் செய்தது. எனினும், அந்த நிறுவனம் பல ஆண்டுகளாகத் தனது நிதி அறிக்கைகளைத் தவறாகச் சித்தரித்து முதலீட்டாளர்களை ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், இது குவாப் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிதி நிலையை எந்த வகையிலும் பாதிக்காது என்று அவர் உறுதியளித்துள்ளார்.

Related News

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி