கிள்ளான், ஆகஸ்ட்.07-
கிள்ளான், பண்டார் செந்தோசாவில் கடந்த ஜுன் 20 ஆம் தேதி ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் இரு பெண்கள் உட்பட 7 அந்நிய நாட்டவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
20 க்கும் 34 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த 7 பேரும், கடந்த ஜுலை 23 ஆம் தேதி அளிக்கப்பட்ட போலீஸ் புகார் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் கமாலாரிஃபின் அமான் ஷா தெரிவித்தார்.
பண்டார் செந்தோசா, லோரோங் லக்சாமானாவில் நிகழ்ந்த இந்தக் கொலைச் சம்பவத்தில் 28 வயதுடைய அந்நிய ஆடவர் ஒருவர், மிகக் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








