கோலாலம்பூர், செப்டம்பர்.05-
இந்தோனேசியாவில் தற்போது நடந்து வரும் ஆர்ப்பாட்டங்கள் விரைவில் ஒரு முடிவுக்கு வரும் என்று மலேசியாவும், ஆசியானும் நம்பிக்கை கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார்.
அண்மையில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியந்தோவைச் சந்தித்த போது, அக்குடியரசின் நடப்பு நிலைமை மேம்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார் என்று அன்வார் குறிப்பிட்டார்.
இந்தோனேசியா, ஒரு ஆசியான் நாடு மட்டுமல்ல. ஒரு நண்பராகவும், ஒரே குடும்பமாகவும் இருப்பதால், அந்நாட்டில் நடப்புச் சூழல், வழக்க நிலைமைக்குத் திரும்ப தாம் பிரார்த்திப்பதாக பிரதமர் தெரிவித்தார்.








