Sep 26, 2026
Thisaigal NewsYouTube
வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: அமைதியை விரும்பும் பெரும்பான்மையினர் குரல் கொடுக்க பிரதமர் அழைப்பு
தற்போதைய செய்திகள்

வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: அமைதியை விரும்பும் பெரும்பான்மையினர் குரல் கொடுக்க பிரதமர் அழைப்பு

Share:

சிறுபான்மை தீவிரவாதக் கும்பலின் குரல், பெரும்பான்மையினரின் குரலை நசுக்க அனுமதிக்கக் கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அன்வர் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.

விசாகத் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கோலாலம்பூரில் பெளத்த ஆலோசனை மன்றம் ஏற்பாட்டில் நடைபெற்ற மாடானி நல்லிணக்க மன்றக் கூட்டத்தில் பேசிய பிரதமர் , ஒரு சில சிறுபான்மைக் குழுக்கள் தங்களின் சுயநலத்திற்காக இன, மத உணர்வுகளைத் தூண்டி, சமூகத்தில் பதற்றத்தை உருவாக்குவதாகக் கூறினார்.

அமைதி, நிலைத்தன்மை மற்றும் நாட்டின் வளர்ச்சியை விரும்பும் பெரும்பான்மை மலேசியர்கள், வெறுப்பு அரசியலுக்கு எதிராகத் தங்களின் குரலை உயர்த்த வேண்டிய நேரம் இது என்றும் அவர் வலியுறுத்தினார்.

'மலேசியா மாடானி' என்ற கோட்பாடு வெறும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை மட்டும் கொண்டதல்ல, அது மனிதநேயம், பரஸ்பர மரியாதை மற்றும் ஒழுக்க நெறிகளையும் உள்ளடக்கியது என்றும் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.

Related News