ஈப்போ, ஜனவரி.12-
தஞ்சோங் மாலிம், புரோட்டோன் சிட்டி குடியிருப்புப் பகுதியில், புலி நடமாட்டத்திற்கான எந்த ஒரு தடயமும் கண்டறியப்படவில்லை என பேராக் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறையான பெர்ஹிலிதான் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக அப்பகுதியில், புலியின் கர்ஜனை கேட்கப்பட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பரவிய காணொளியைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், அக்காணொளி போலியாகத் தயாரிக்கப்பட்டது என்றும், அப்பகுதியில் புலிகளின் நடமாட்டங்கள் எதுவும் பதிவாகவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இது போன்ற போலியான காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பேராக் மாநில பெர்ஹிலிதான் இயக்குநர் யுசோஃப் ஷாரிஃப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்கள், பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதோடு, அதிகாரிகளின் நேரத்தையும் வீணடிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.








