கோலாலம்பூர், அக்டோபர்.03-
Global Sumud Flotilla மனிதநேயக் குழுவில் இடம் பெற்றுள்ள தன்னார்வலர்களைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியுள்ள இஸ்ரேலின் குற்றச்சாட்டு அடாவடித்தனமானது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
காஸாவிற்கு Global Sumud Flotilla மேற்கொண்ட பயணம் யூதர்களின் ஆட்சியில் ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்கான ஒரு மனிதாபிமானப் பணியாகும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
உண்மையிலேயே யார் பயங்கரவாதிகள் என்று வினவிய அன்வார், அவர்கள்தான் பயங்கரவாதிகள் என்றார்.
பெரிய பயங்கரவாதிகளுக்கு எதிராக Global Sumud Flotilla குழுவினர் ஆயுதங்களை ஏந்தவில்லை. மக்களைக் கொல்லவில்லை என்று பிரதமர் விளக்கினார்.








