Sep 28, 2026
Thisaigal NewsYouTube
கெமெஞ்சே சாலை விபத்தில் கணவன், மனைவி பலி – 4 வயது மகன் காயம்
தற்போதைய செய்திகள்

கெமெஞ்சே சாலை விபத்தில் கணவன், மனைவி பலி – 4 வயது மகன் காயம்

Share:

நெகிரி செம்பிலான், கெமெஞ்சே சாலையில் நேற்று காலை இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்ததுடன், அவர்களது நான்கு வயது மகன் காயமடைந்தார்.

காலை 10.55 மணியளவில் நடந்த விபத்தில், 26 வயது பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை ஏற்றிச் சென்ற புரோட்டோன் வீரா காரை ஓட்டிய அவரது 27 வயது கணவர், கெமெஞ்சே சுகாதார கிளினிக்கில் உயிரிழந்ததாக தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் அமிருடின் சரிமான் தெரிவித்தார்.

கெமெஞ்சேயிலிருந்து புக்கிட் ரோக்கான் நோக்கிச் சென்ற புரோட்டோன் வீரா, கட்டுப்பாட்டை இழந்து எதிர்ப்புறச் சாலைக்குள் நுழைந்து, எதிரே வந்த பெரோடுவா பெஸ்ஸா மீது மோதியதாக அவர் கூறினார்.

விபத்தில் காயமடைந்த நான்கு வயது சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக தம்பின் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

Related News