சமூக ஊடகங்களில் முன்னாள் பேரரசியை அவமதித்ததாக புகார் மீதான வழக்கில் குற்றச்சாட்டிலிலிருந்து விடுவிக்கப்பட்ட நபரான இறைச்சிக்கடைக்காரர் ஒருவர், எதிர்வாதம் புரியும்படி புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ஷாரில் சரிஃப் என்ற அந்த இறைச்சிக்கடைக்காரர், முன்னதாக, மனநலம் குன்றியவர் என்பதால் அவருக்கு உள்நோக்கம் இருந்ததை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது எனக் கூறி கீழ் நிலை நீதிமன்றம் அவரை விடுவித்தன. ஆனால், 'மனநலமின்மை' என்பது தற்காப்பு வாதமாக முன்வைக்கப்படுவதால், அவர் தனது தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டும் என நீதிபதி அஸ்மான் அப்துல்லா தலைமையில் தீர்ப்பளித்தது.
ஏற்கனவே 2019, 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் அரச குடும்பத்தை அவமதித்ததற்காக மூன்று முறை சிறைத்தண்டனை அனுபவித்த ஷாரில், மீண்டும் அதே போன்ற குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். இவ்வழக்கு வரும் மே 15-ஆம் தேதி கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.








