Aug 7, 2026
Thisaigal NewsYouTube
ஆகஸ்ட் 8 முதல் பாலோ – ஜே பி சென்ட்ரல் இடையிலான  தென் பிராந்தியத்திற்கான ரயில் சேவை விரிவாக்கம்
தற்போதைய செய்திகள்

ஆகஸ்ட் 8 முதல் பாலோ – ஜே பி சென்ட்ரல் இடையிலான தென் பிராந்தியத்திற்கான ரயில் சேவை விரிவாக்கம்

Share:

மலாயன் ரயில்வே பெர்ஹாட்டான எனப்படும் KTMB தனது தென் பிராந்தியத்திற்கான ரயில் சேவையை வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதல் பாலோ – ஜே பி சென்ட்ரல் இடையிலான வழித்தடத்திற்கு விரிவுபடுத்துகின்றது.

இந்த புதிய சேவையானது, பாலோ, களுவாங் ,ரெங்கம், லயாங்-லயாங், குலாய், கெம்பாஸ் பாரு மற்றும் ஜே பி சென்ட்ரல் ஆகிய 7 நிலையங்களை இணைக்கவுள்ளது.

தினமும் இரு திசைகளிலும் தலா 5 சேவைகள் என மொத்தம் 10 ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளன.

பாலோ – ஜே பி சென்ட்ரல் இடையிலான பயண நேரம் சுமார் 120 நிமிடங்கள் ஆகும்.

இந்த புதிய மின்சார ரயில்கள் அறிமுகமாகும் வரை, பாலோ – ஜே பி சென்ட்ரல் ஒரு வழிக் கட்டணம் 15 ரிங்கிட் 30 காசிலிருந்து, 7 ரிங்கிட் 70 காசுகளாக சலுகை விலையில் வழங்கப்படும்.

மேலும், மைரயில் லைஃப் பாஸ் திட்டத்தின் கீழ் 4 முதல் 6 வயது குழந்தைகள், மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் டிசம்பர் 31 வரை இலவசமாக பயணிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை விரிவாக்கமானது, ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலமமான JS-SEZ வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதுடன், தொழிலாளர்களின் பயண வசதியை மேம்படுத்தி தனியார் வாகனப் பயன்பாட்டைக் குறைக்க உதவும் என KTMB தெரிவித்துள்ளது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி