Oct 1, 2026
Thisaigal NewsYouTube

மண்வாரி இயந்திரத்தின் பக்கெட் மோதி வெல்டிங் பணியாளர் மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மண்வாரி இயந்திரத்தின் பக்கெட் மோதி வெல்டிங் பணியாளர் மரணம்

கோல நெருஸ், டிசம்பர்.11-

திரெங்கானு, கோல நெருஸ் என்ற இடத்தில் கடலலைத் தடுப்புச் சுவர் கட்டுமானப் பணியின் போது மண்வாரி இயந்திரத்தின் பக்கெட் மோதி, வெல்டிங் பணியாளர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று காலை 9.48 மணிக்கு கோல நெருஸ், பத்து ரக்கிட் கடலோரப் பகுதியில் நிகழ்ந்தது. இரும்புத் தூணை, மண்வாரி இயந்திரத்தின் பக்கெட்டுடன் சங்கிலியில் பிணைக்க முயற்சி செய்த போது எதிர்பாராதவிதமான அந்த வெல்டிங் பணியாளரை பக்கெட் மோதி விட்டதாக கோலத் திரெங்கானு மாவடட் போலீஸ் தலைர் ஏசிபி அஸ்லி முகமட் நோர் தெரிவித்தார்.

கடும் காயங்களுக்கு ஆளான 54 வயது நபர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் குறிப்பிட்டார். அவரின் மரணம் திடீர் இறப்பு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →