Oct 9, 2026
Thisaigal NewsYouTube

மூன்று சந்தேகப் பேர்வழிகளுக்கு 7 நாள் தடுப்புக் காவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மூன்று சந்தேகப் பேர்வழிகளுக்கு 7 நாள் தடுப்புக் காவல்

சிப்பாங், ஜூன்.27-

சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி மனிஷாபிரிட் கவுர் பசுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகப் பேர்வழிகளை விசாரணைக்கு ஏதுவாக 7 நாட்கள் தடுத்து வைப்பதற்கு சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

இரண்டு பெண்களும், ஒரு ஆணும் கைவிலங்கிடப்பட்ட நிலையில் இன்று காலை 9 மணியளவில் சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி அஸாராவுர்னி அப்துல் ரஹ்மான் முன்னிலையில் நிறுத்தப்பட்டனர்.

அந்த மூவரையும், இன்று ஜுன் 27 ஆம் தேதி தொடங்கி வரும் ஜுலை 3 ஆம் தேதி வரை 7 நாட்களுக்குத் தடுத்து வைப்பதற்கு நீதிபதி அஸாராவுர்னி போலீசாருக்கு அனுமதி அளித்தார்.

தடுப்புக் காவல் அனுமதி வழங்கப்பட்டவுடன் மூவரும் காலை 9.40 மணிக்கு நீதிமன்றத்திலிருந்து சிப்பாங் மாவட்ட போலீஸ் நிலையத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →