Aug 6, 2026
Thisaigal NewsYouTube
உலோகப்பொருள், மறு சுழற்சி தொழிற்சாலை தீயில் அழிந்தது
தற்போதைய செய்திகள்

உலோகப்பொருள், மறு சுழற்சி தொழிற்சாலை தீயில் அழிந்தது

Share:

டிச. 26-

நேற்றிரவு நிகழ்ந்த தீ விபத்தில் கோலாலம்பூர், சுங்கை பீசியில் உள்ள பழைய உலோகப்பொருள், மறுசுழற்சி தொழிற்சாலை ஒன்று, அழிந்தது.

இரவு 9 மணியளவில் நிகழ்ந்த இந்த தீவிபத்தில் மறுசுழற்சிக்கு வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் கொழுந்து விட்டு எரிந்ததால் தீயை கட்டுப்படுத்துவதற்கு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் கடுமையாக போராடியதாக கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புப்படை இலாகா தெரிவித்துள்ளது.

தீ மற்ற வர்த்தகத் தளங்களில் பரவாமல் தடுப்பதற்கு அதனை முழுமையாக கட்டுப்படுத்தும் பணி, இரவு 10.55 மணியளவில் நிறைவுப் பெற்றதாக அவ்விலாகா குறிப்பிட்டுள்ளது.

இத்தீவிபத்தில் அந்த தொழிற்சாலை முற்றாக அழிந்தது. தீ விபத்திற்கான காரணங்கள் முழு வீச்சில் ஆராயப்பட்டு வருவதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

Related News