ஜொகூர் மாநில சுல்தான் இப்ராஹிம் அல்மர்ஹும் சுல்தான் இஸ்கண்டாரை இழிவுப்படுத்தும் விதமாக தனது முகநூலில் பதிவிட்டிருந்த பதிவு தொடர்பாக போலீசார் அந்தக் முகநூல் பக்கத்தின் உரிமையாளரைக் கைது செய்துள்ளனர்.
ஜொகூர் சுல்தானை இழிவுப்படுத்தும் விதமாக பதிவிட்டிருந்த 'இன்டெரா மூலியா' என்று பெயரிடப்பட்ட அந்த முகநூல் கணக்கைப் போலீசார் முடக்கி உள்ளனர் என மலேசிய போலீஸ் படையின் செயலாளர் டத்தோ நூர் சியா சட்டுடின் தெரிவித்தார்.
பூச்சோங் வட்டாரத்தைச் சேர்ந்த அந்த 33 வயது ஆடவரை போலீசார் கைது செய்ததுடன் அவரிடமிருந்து தொலைபேசி மற்றும் சிம் கார்ட்டையும் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.








