கோலாலம்பூர், அக்டோபர்.01-
காஸா மீதான இஸ்ரேலின் போரை நிறுத்த, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ள விரிவான திட்டத்திற்கு மலேசியா பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இத்திட்டம், இஸ்ரேலிய படைகளைத் திருப்பி அனுப்பவும், இடம் பெயர்ந்த பாலஸ்தீனர்கள் தங்கள் நிலப்பகுதிக்கு திரும்பவும் வழிவகுக்கும் என்றும் மலேசியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அதே வேளையில், காஸாகின் மறுகட்டமைப்பிற்கும் இத்திட்டம் பெரிதும் துணை நிற்கும் என்றும் மலேசியா குறிப்பிட்டுள்ளது.








